** அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு ** அட்மிஷன் நடைபெறுகிறது *

Saturday 8 September 2012

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும்..
எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
Photobucket